தென்காசி - மதுரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வரும் ஒரு தரப்பினர்.  
தற்போதைய செய்திகள்

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

DIN

கடையநல்லூர்: தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடையநல்லூர் தினசரி சந்தை அருகே உள்ள முப்புடாதி அம்மன் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது.

நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ஒரு பிரிவைச் சேர்ந்த ஒருவரை வேறொரு பிரிவைச் சேர்ந்த சிலர் தாக்கினார்களாம்.

இதையடுத்து இரண்டு தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

தென்காசி - மதுரை சாலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சாலை மறியலில் ஈடுபட்ட மற்றொரு தரப்பினர்.

இந்தநிலையில் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் தென்காசி - மதுரை சாலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து மற்றொரு தரப்பைச் சேர்ந்த சிலரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில், போலீசார் பிடித்து சென்றவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் எதிர் தரப்பை சேர்ந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் சனிக்கிழமை மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்கள் தென்காசி - மதுரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தென்காசி-மதுரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி வேன் - கார் மோதி விபத்து: ஒருவர் பலி

அதிமுகவிலும் குடும்ப அரசியல்: செங்கோட்டையன் அதிர்ச்சித் தகவல்!

உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ பரிசுத்தொகை அறிவிப்பு

பணமோசடி வழக்கு: அனில் அம்பானியின் ரூ.3,000 கோடி சொத்துகள் முடக்கம்!

ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7 பேர் பலி, 150 பேர் காயம்!

SCROLL FOR NEXT