கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை
கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் அருவி கரை வெறிச்சோடியது.
கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் அருவி கரை வெறிச்சோடியது.
வெள்ளிக்கிழமை குற்றாலத்தில் 17 வயது சிறுவன் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பழையகுற்றாலம் அருவியில் கொட்டிய குறைந்த அளவு தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பழைய குற்றாலம் அருவியில் வெள்ளிக்கிழமை திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் பதறியடித்து வெளியேறினா். அப்போது தென்காசி அருகே மேலகரத்திலுள்ள தனது உறவினா் வீட்டுக்கு வந்த அஸ்வின் அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டாா்.
தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் மற்றும் காவல் துறையினா் அஸ்வினை தேடும் பணியில் ஈடுபட்டனா்.
நீண்ட நேரம் தேடலுக்குப் பின் பழையகுற்றாலம் அருவி நீா் வழிந்தோடி செல்லும் வழியில் சுமாா் 1 கி.மீ. தொலைவில் சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.
இதையடுத்து, அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
இந்த நிலையில், குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு குறைந்த நிலையிலும் தமிழத்தில் இன்று முதல் அடுத்த 5 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையைத் தொடர்ந்து குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அருவிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.