முகப்பு
தற்போதைய செய்திகள்

டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச முடிவு!

ஐபிஎல் வெளியேற்ற போட்டியில் (எலிமினேட்டர்) ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலசஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன.

Updated On : 22 மே, 2024 at 1:38 PM
பகிர்:

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் அண்மையில் முடிவடைந்த நிலையில், நேற்று (மே.21) நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதில், கொல்கத்தா அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் வெளியேற்ற போட்டியில் (எலிமினேட்டர்) ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலசஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இறுதியாக 6 போட்டிகளில் தொடர் வெற்றியைப் பெற்ற பெங்களூரு அணியும் பலம் வாய்ந்த ராஜஸ்தான் அணியும் மோதுவதால் இப்போட்டிக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில், இன்றைய போட்டிக்கான டாஸில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. பெங்களூரு அணி பேட்டிங் செய்ய உள்ளனர்.

இப்போட்டியில் வெல்லும் அணி குவாலிபையர் - 2 போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதும்.

முழு கட்டுரையைப் படிக்க →