முகப்பு
கிரிக்கெட்

வாழ்வா - சாவா ஆட்டத்தில் பாகிஸ்தான் பேட்டிங்.. சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுமா?

நமீபியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளதைப் பற்றி...

Updated On : 18 பிப்ரவரி 2026, 2:57 pm IST
பாகிஸ்தான் அணி வீரர்கள். - படம்: ஏபி.
பகிர்:

டி20 உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்றில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

10-வது ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் -8 சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளன.

இந்த நிலையில், கொழும்பு சிங்கள கிரிக்கெட் விளையாட்டுத் திடலில் இன்று (பிப்.18) நடைபெறும் லீக் சுற்றின் 35 வது ஆட்டத்தில் சூப்பர் 8 சுற்றில் 8-வது அணியாகத் தேர்வாகும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் நமீபியா அணியும் மோதுகின்றன.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால், சூப்பர் 8 சுற்றுக்கும், தோல்வியடைந்தால் அமெரிக்கா அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறும் என்ற சூழலில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அலி அகா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சரியாக சோபிக்காத வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிதி மற்றும் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமது இருவரும் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக சல்மான் மிர்சா, நஃபே இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நமீபியா அணி

லூரன் ஸ்டீன்காம்ப், ஜான் ஃப்ரைலின்க், ஜான் நிகோல், ஜெர்ஹார்ட் எராஸ்மஸ்(கேப்டன்), அலெக்சாண்டர் வோல்சென்க், ஜேஜே ஸ்மிட், ஜேன் கிரீன் (விக்கெட் கீப்பர்), ரூபன் ட்ரம்பெல்மேன், வில்லெம் மைபர்க், பெர்னார்ட் ஷால்ட்ஸ், ஜாக் பிரஸ்ஸல்

பாகிஸ்தான் அணி

சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், சல்மான் அலி அகா (கேப்டன்), பாபர் அசாம், உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), கவாஜா நஃபே, ஷதாப் கான், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், சல்மான் மிர்சா, உஸ்மான் தாரிக்.

summary

Pakistan won the toss and elected to bat against Namibia in the league stage of the T20 World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.