தற்போதைய செய்திகள்

ராகுல் காந்தியை புகழ்ந்த பதிவை நீக்கினார் செல்லூர் ராஜு!

ராகுல் காந்தியை புகழ்ந்த எக்ஸ் தளப் பதிவை செல்லூர் ராஜு நீக்கியுள்ளார்.

DIN

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் விடியோவை வெளியிட்டு நேற்று (மே 22) புகழ்ந்து பதிவிட்டு இருந்தார்.

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விலகுவதாக அறிவித்து, மக்களவைத் தேர்தலில் புதிய கூட்டணியை உருவாக்கி போட்டியிட்டது.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது எக்ஸ் தளத்தில், "நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் !!!" என்று ராகுல் காந்தி மக்களுடன் உரையாடும் விடியோவை நேற்று வெளியிட்டு இருந்தார்.

இப்பதிவு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி சர்ச்சையானது. மேலும், செல்லூர் ராஜு அதிமுக மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தற்போது ராகுல் காந்தியை புகழ்ந்த எக்ஸ் தளப் பதிவை செல்லூர் ராஜு நீக்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யூ டியூப் சேனல்களுக்கும் உரிமம் கட்டாயம்: கர்நாடக அரசு பரிசீலனை

அதிவேக சதமடித்த ஸ்மிருதி மந்தனா..! ஆஸி.க்கு எதிராக 3-ஆவது சதம்!

வசந்த் ரவியின் இந்திரா ஓடிடி தேதி!

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

நீ சிங்கம்... காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக் பாஸ் செளந்தர்யா!

SCROLL FOR NEXT