கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

தொட்டபெட்டா சிகரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி!

உதகையில் உள்ள தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை(மே 23) முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

DIN

உதகையில் உள்ள தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை(மே 23) முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் தொட்டபெட்டா ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகின்ற காரணத்தினால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைச் சிகரம் ஆகிய இடங்களுக்கு செல்கின்றனர்.

இந்த நிலையில், உதகையில் உள்ள தொட்டபெட்டா சிகரம் செல்வதற்கு மே 16 முதல் 7 நாள்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பாஸ்டேக் சோதனைச் சாவடியை மாற்றியமைக்கும் பணி நடைபெறுவதால் மே 22 ஆம் தேதி வரை தொட்டபெட்டா சிகரம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பாஸ்டேக் சோதனைச் சாவடியை மாற்றியமைக்கும் பணி 50 சதவீதம் நிறைவடைந்ததால் வியாழக்கிழமை (மே 23) முதல் தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத்துறை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT