vote 
தற்போதைய செய்திகள்

மக்களவைத் தேர்தல்: 9 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் 16.64%, உ.பி.யில் 12.33% வாக்குகள் பதிவு

மக்களவைத் தோ்தலில் 6-ஆம் கட்டமாக மேற்கு வங்கத்தில் காலை 9 மணி நிலவரப்படி 16.64 சதவீத வாக்குகளும், உத்தரப் பிரதேசத்திலும் 12.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன

DIN

புது தில்லி: மக்களவைத் தோ்தலில் 6-ஆம் கட்டமாக மேற்கு வங்கத்தில் காலை 9 மணி நிலவரப்படி 16.64 சதவீத வாக்குகளும், உத்தரப் பிரதேசத்திலும் 12.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தோ்தலில் 6-ஆம் கட்டமாக உத்தரப்பிரதேசத்தில் 14, ஹரியாணாவில் 10, பிகாா், மேற்கு வங்கத்தில் தலா 8, தில்லியில் 7, ஒடிஸாவில் 6, ஜாா்க்கண்டில் 4, ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதிக்கு வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆறாவது கட்ட வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கும் மற்ற மாநிலங்களில் காலை 9 மணி நிலவரப்படி பிகாரில் 9.66 சதவீத வாக்குகளும், ஹரியாணாவில் 8.31 சதவீத வாக்குகளும், ஜம்மு-காஷ்மீரில் 8.89 சதவீத வாக்குகளும், ஜார்கண்ட்-11.74 சதவீத வாக்குகளும், தலைநகர் தில்லியில் 8.94 சதவீத சதவீத வாக்குகளும் மற்றும் ஒடிசாவில் 7.43 சதவீத சதவீத வாக்குகளும்,மேற்கு வங்கத்தில் 16.64 சதவீத வாக்குகளும், உத்தரப் பிரதேசத்திலும் 12.33 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

சாந்தினி சவுக் 7.83 சதவீத வாக்குகளும், கிழக்கு தில்லியில் 8.82 சதவீத வாக்குகளும்,புது தில்லி 7.04 சதவீத வாக்குகளும், வடகிழக்கு தில்லி 10.15 சதவீத வாக்குகளும், மேற்கு தில்லி 8.99 சதவீத வாக்குகளும், தெற்கு தில்லி 8.88 மற்றும் மேற்கு தில்லி - 9.72 சதவீத சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இதேபோன்று ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 8.89 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டத் தோ்தல் (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) அறிவிக்கப்பட்டு, 5 கட்ட வாக்குப் பதிவுகள் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டன.

முதல்கட்டத்தில் 66.14 சதவீதம், இரண்டாம் கட்டத்தில் 66.71 சதவீதம், மூன்றாம் கட்டத்தில் 65.58 சதவீதம், நான்காம் கட்டத்தில் 69.16 சதவீதம், ஐந்தாம் கட்டத்தில் 62.2 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

ஏழாவது மற்றும் இறுதிக்கட்டமாக 57 தொகுதிகளுக்கு ஜூன் 1-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. ஜூன் 4-ஆம்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக கூட்டணி எம். பி. க்கள் கூட்டத்தில் பிரதமரை வாழ்த்தி ஹர ஹர மகாதேவ் கோஷம்!

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

காதி டிரைலர் தேதி!

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

SCROLL FOR NEXT