தற்போதைய செய்திகள்

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் - 2 திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் இரண்டு பாடல்கள் முன்னதாக வெளியாகி கலவையான விமரிசனங்களை பெற்றது.

இந்த நிலையில், இந்தியன் - 2 படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக படக்குழு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ராம் சரண் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.

இப்படத்தை ஜூலை 12-ல் வெளியிடுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துறையூா் பகுதியில் நாளை(ஆக.4) மின் தடை

மணப்பாக்கம் சின்ன கன்னியம்மன் கோயில் ஆடி தீமிதி விழா

முசிறி அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

ஆக. 7-இல் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் முப்பெரும் விழா

முசிறியில் காரில் வெளி மாநில மதுபாட்டில் கொண்டு சென்றவா் கைது

SCROLL FOR NEXT