முகப்பு
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 360 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 360 குறைந்து ரூ. 53,840-க்கு விற்பனையாகிறது.

Updated On : 30 மே, 2024 at 4:30 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 360 குறைந்து ரூ. 53,840-க்கு விற்பனையாகிறது.

கடந்த சில வாரங்களாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 280 உயா்ந்து ரூ. 54,200-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், வியாழக்கிழமை தங்கத்தின் பவுனுக்கு ரூ. 360 குறைந்து ரூ. 53,840-க்கு விற்பனையாகிறது.

வியாழக்கிழமை கிராமுக்கு ரூ. 45 குறைந்து ரூ. 6,730-க்கும், பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.53,840-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1.20 குறைந்து ரூ. 101-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 1,200 குறைந்து ரூ. 1,02,200-க்கும் விற்பனையாகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →