தஞ்சாவூர் பெரிய கோயிலில் சதய விழாவுக்காக வெள்ளிக்கிழமை நடைபெற்ற பந்தல் கால் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள். 
தற்போதைய செய்திகள்

தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழனின் 1039 ஆவது சதய விழா

தஞ்சாவூர் பெரியகோவிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1039 -ஆவது சதய விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பந்தல் கால் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1039 -ஆவது சதய விழா நவம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதி இரண்டு நாட்கள் அரசு விழாவாக நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பந்தல் கால் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.

பார் போற்றும் புகழுடைய இந்தப் பெரியகோயிலைக் கட்டி தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அவர் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இரண்டு நாள்கள் சிறப்பாக விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039 -ஆவது சதய விழா நவம்பர் 9 மற்றும் 10-ஆம் தேதி இரண்டு நாள்கள் அரசு விழாவாக நடைபெற உள்ளது.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி சதய நட்சத்திரத்தில் மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த மற்றும் முடிசூட்டிய நாள் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 1,039 சதய விழா வருகிற 9 மற்றும் 10 ஆம் தேதி இரண்டு நாட்கள் அரசு விழாவாக நடைபெற உள்ளது.

இந்த விழாவினை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் பந்தல் கால் நடும் விழா வெள்ளிக்கிழமை(நவ.1) காலை நடைபெற்றது. முன்னதாக, பந்தல் காலுக்கு மஞ்சள், சந்தனம், பால் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பந்தல் கால் நடுவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழாவினை சதயகுழு விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT