கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

சென்னை திரும்பும் மக்கள்! சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!!

தீபாவளி பண்டிகை முடிந்து வெளியூர் மக்கள் சென்னைக்கு திரும்பி வரும் நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்.

DIN

தீபாவளி பண்டிகை முடிந்து வெளியூர் மக்கள் சென்னைக்கு திரும்பி வரும் நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் வசிக்கும் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இதற்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

அக். 31 வியாழக்கிழமை தீபாளியையொட்டி அதற்கு முந்தைய நாள்கள் நெடுங்கலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

இதையடுத்து 4 நாள்கள் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து மக்கள் சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.

நேற்றே(சனிக்கிழமை) தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

இந்நிலையில் இன்று(ஞாயிறு) பிற்பகல் உளுந்தூர்பேட்டை, பரனூர் உள்ளிட்ட சுங்கச்சாவடி இருக்கும் பகுதிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இன்று இரவு இதைவிட நெரிசல் அதிகம் காணப்படும் என்று தெரிகிறது.

தமிழகத்தில் பல்வேறு ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் இன்று அதிகம் காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நோபல் கிடைக்காவிட்டால் என்ன? அதைவிட பெரியது கிடைத்துவிட்டது: டிரம்ப்

90 பேருக்கு கலைமாமணி விருதுகள்! இன்று வழங்கப்படுகின்றன!!

சீனப் பொருள்களுக்கு கூடுதலாக 100% வரி: டிரம்ப் அதிரடி அறிவிப்பு

பணமோசடி வழக்கு: அனில் அம்பானி ரிலையன்ஸ் குழும நிர்வாகி கைது!

சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் நடுவானில் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு!

SCROLL FOR NEXT