முகப்பு
தற்போதைய செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 36 மாவட்டங்களில் மழை!

இரவு 10 மணி வரை சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் மழை.

Updated On : 4 நவம்பர், 2024 at 2:16 PM
கோப்புப்படம்
பகிர்:

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்தமிழகம் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (10 மணி வரை) திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, விருதுநகர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூர், தருமபுரி, விழுப்புரம், புதுக்கோட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கோவை, திருப்பத்தூர், நீலகிரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →