உச்ச நீதிமன்றம் 
தற்போதைய செய்திகள்

அனைத்து தனியார் சொத்துக்களையும் அரசால் கையகப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம்

தனியாரின் சொத்துகளை அரசு கையகப்படுத்துவது தொடர்பாக...

DIN

தனியாருக்கு சொந்தமான அனைத்து சொத்துகளையும் அரசால் கையகப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குடிமக்களுக்கு சொந்தமான அனைத்து சொத்துகளையும் பொது நலனுக்காக கையகப்படுத்தும் உரிமை அரசுக்கு இல்லை என்று இன்று வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் , 7 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

சட்டப்பிரிவு 39B-ல் உள்ளபடி சமூகத்தில் உள்ள குடிமக்களுக்கு சொந்தமான சொத்துகளை, பொது நலன் கருதி மாநிலங்கள் கையகப்படுத்த முடியாது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஒரு தனிநபருக்கு சொந்தமான சொத்தை சமூகத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவானதாக கருத முடியாது என்றும், ஏனெனில் அந்த சொந்துகள் அவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்வதகாகவும் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் அண்ணன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் பிறந்த மண்! - மதுரை குறித்து Vijay | TVK

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளம்பெண்ணைக் குறிப்பிட்ட விஜய்!

இந்திய டி20 அணியில் இடம்பெறாதது குறித்து ஷ்ரேயாஸ் தந்தை வேதனை

தமிழக குழந்தைகளுக்குத் தாய்மாமன்! விஜய் பேச்சு

சாம்சன் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா.. யாரும் எதிர்பார்க்காத அதிரடி தள்ளுபடியில்!

SCROLL FOR NEXT