FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்தமாத இறுதிக்குள் முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் திறப்பு

முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் திறப்பு தொடர்பாக...

Updated On : 5 நவம்பர் 2024, 9:56 am IST
கோப்பிலிருந்து...
பகிர்:

இந்தமாத இறுதிக்குள் முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் 120 பேருந்துகளை நிறுத்தும் வகையிலும், ஓட்டுநா் - நடத்துநர்கள் தங்கும் வகையிலும் உருவாக்கப்பட்டு வருகிறது. இது திறக்கப்பட்ட பின் கிளாம்பாக்கத்தில் நெரிசல் குறையும்.

Advertisement

Advertisement

ரூ. 42 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று தகவல் தெரிவித்தார்.

விஜய் திமுக அரசை விமர்சனம் செய்கிறாரே? என்று செய்தியாளர்களின் கேள்விக்கு, வசைபாடுபவர்கள் குறித்து எங்களுக்கு கவலையில்லை, அவர்களும் வாழ்த்தும் அளவிற்கு எங்கள் பணி இருக்கும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments