தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 35-வது கூட்டம் இன்று(நவ. 6) பிற்பகல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகியவற்றுக்கு இடையே காவிரி நீர் பங்கீட்டில் ஏற்படும் பிரச்னைகளை காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகியவை பேசி தீர்த்து வருகின்றன.
காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை 34 முறை கூடியுள்ள நிலையில், இன்று 35-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: டிரம்ப்பிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து!
தமிழகத்திற்கு அக்டோபர், நவம்பர் மாதத்துக்கு வழங்கவேண்டிய காவிரி நீர் பங்கீடு தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
நவம்பர் மாதத்துக்கு வழங்க வேண்டிய 15.79 டிஎம்சி தண்ணீரை திறக்க உத்தரவிட வேண்டும் என்றும், தற்போதுவரை 4 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளதால் எஞ்சிய நீரை வழங்க வேண்டும் என்றும் தமிழக அதிகாரிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தமிழகத்திற்கு அக்டோபர் மாதத்திற்கு நிர்ணயித்ததைவிட கூடுதல் நீர் தரப்பட்டுள்ளதால், மேலும் தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று கர்நாடக அதிகாரிகள் தெரிவித்ததாகத் தகவல் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.