முகப்பு
கோவை விமான நிலையத்தில் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்த திமுக பொதுக்குழு உறுப்பினர் கதிரை உடனடியாக காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் திமுகவினர்.
தற்போதைய செய்திகள்

கோவையில் பரபரப்பு... முதல்வரை வழியனுப்ப வந்த திமுக நிர்வாகி மயக்கம்!

கோவை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை வழியனுப்ப வந்திருந்த திமுக பொதுக்குழு உறுப்பினர் கதிர் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

Updated On : 6 நவம்பர், 2024 at 7:01 AM
கோவை விமான நிலையத்தில் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்த திமுக பொதுக்குழு உறுப்பினர் கதிரை உடனடியாக காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் திமுகவினர்.
பகிர்:

கோவை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை வழியனுப்ப வந்திருந்த கோவை தெற்கு தொகுதி திமுக பொதுக்குழு உறுப்பினர் கதிர் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

கோவை மாவட்டத்தில் இரண்டு நாள்களாக நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட முதல்வர் மு. க. ஸ்டாலின், புதன்கிழமை கலைஞர் நூலாக அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று விட்டு சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார்.

சென்னை திரும்பும் முதல்வரை திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் என பலரும் விமான நிலையம் வந்திருந்து வழியனுப்பி வைத்தனர். விமான நிலையப் பகுதியில் சாலைகளில் இரு புறங்களிலும் இருந்த மக்களும் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் முதல்வரை வழியனுப்பி வைக்க வந்திருந்த கோவை தெற்கு தொகுதி திமுக பொதுக்குழு உறுப்பினர் கதிர் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட திமுகவினர் காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

முழு கட்டுரையைப் படிக்க →