கர்நாடகாவில் பதிவு திருமணம் செய்து கொண்ட சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க சுவாமிகள்-ஹேமாஸ்ரீ 
தற்போதைய செய்திகள்

கன்னட பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட சூரியனார் கோவில் ஆதினம்!

சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க சுவாமிகள் கர்நாடகாவில் பதிவு திருமணம் செய்து கொண்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க சுவாமிகள் கர்நாடகாவில் பதிவு திருமணம் செய்து கொண்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆதீனம் மகாலிங்க சுவாமி பதிவு திருமண சான்றிதழை வெளியிட்டுள்ளார்.

திருவிடைமருதூர் அருகே சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசி பரமாச்சாரியார் சுவாமிகள், கர்நாடக மாநிலத்தில் ஹேமாஸ்ரீ(47) என்பவரை திருமணம் செய்துள்ள விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் பெரும்பாலான ஆதீனங்கள் இல்லறம் தவிர்த்து துறவறம் மேற்கொண்டவர்கள்.

ஆதீனம் மகாலிங்க சுவாமி பதிவு திருமணச் சான்றிதழ்

இந்த நிலையில், துறவறம் மேற்கொண்டிருந்த சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசி பரமாச்சாரியார் சுவாமிகள்(54) தற்போது 47 வயதுடைய ஹேமாஸ்ரீ என்பவரை கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி பதிவு திருமணம் செய்துகொண்டதாக வரும் தகவல் பேசுபொருளாக மாறியுள்ளது.

கர்நாடகாவில் சிவாக்கிர யோகிகள் மடம் தொடங்குவதற்காக இடம் கொடுத்த ஹேமாஸ்ரீ என்பவரையே திருமணம் செய்துகொண்டுள்ளார். இது தொடர்பான பதிவு சான்றிதழ் சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது.

ஹேமாஸ்ரீ மடத்தை நிர்வகிக்கவும், டிரஸ்டியாக செயல்படுவதற்கு ஏதுவாக பதிவு திருமணம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க பரமாச்சாரியார் சுவாமிகள் கூறியதாவது:

கன்னட பெண்ணைத் திருமணம் செய்துகொண்டது உண்மைதான. கர்நாடக மாநிலத்தில் சைவ மடம் இல்லை. அங்கு சைவ மடம் அமைப்பதற்கு ஹேமாஸ்ரீ இடம் அளித்தார். அவரையே அந்த மடத்தின் செயலாளராக(டிரஸ்டி) நியமித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாட்டில் ஒரு சில ஆதீனங்கள் திருமணம் செய்து கொண்டு ஆதீன கர்த்தர்களாக இருப்பதாகவும், சூரியனார் கோவில் ஆதினம் மடாதிபதியாக தான் நீடிப்பதாகவும், கர்நாடக மாநில சைவ மடத்தின் செயலராக தனது மனைவி ஹேமாஸ்ரீ இருப்பார் என மகாலிங்க பரமாச்சாரியார் சுவாமிகள் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

பழைய செய்திகளைப் படித்துவிட்டு குற்றச்சாட்டு வைக்கிறார் விஜய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா விலை உயர்வு அறிவிப்பு!

SCROLL FOR NEXT