இடிந்து விழுந்த 3 மாடிக் கட்டடம். படம்: PTI
தற்போதைய செய்திகள்

கர்நாடகம்: 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து!

கர்நாடகத்தில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது தொடர்பாக...

DIN

கர்நாடகத்தில் கோலார் மாவட்டத்தில் உள்ள பங்காரப்பேட்டை நகரில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது.

ராஜ் குமார் என்பவருக்கு சொந்தமான 3 மாடிக் கட்டடத்தின் தரைத் தளத்தில் புதுப்பிக்கும் பணி மேற்கொண்டிருந்தபோது, முக்கியமான பில்லரை இடித்ததால் 3 மாடிக் கட்டடம் சரிந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தின்போது, குடியுருப்பில் சிக்கிய 3 குடும்பங்களை தீயணைப்புத் துறையினர் வெளியேற்றினர்.

மேலும், கட்டடம் இடிந்து விழுந்ததில் எதிரேயுள்ள தனியார் பள்ளியின் வளாகமும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இதுவரை யாருக்கும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

சூப்பர் அறிவிப்பு... செபியில் 110 உதவி மேலளார் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசில் வேலை: +2 முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!

சீனாவிலிருந்து வழிநடத்தப்பட்டதாக கூறப்படும் வா்த்தக மோசடி மூவா் கைது!

எல்விஎம்-3 ராக்கெட் நவ.2-இல் விண்ணில் பாய்கிறது!

SCROLL FOR NEXT