முகப்பு
இந்தியா

வாகனங்கள் மீது இடிந்து விழுந்த மெட்ரோ கட்டுமானம்! ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்

சாலையில் சென்ற வாகனங்கள் மீது மெட்ரோ மேம்பால கட்டுமானம் இடிந்து விழுந்தது! ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 4:55 PM
- PTI
பகிர்:

மும்பையில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளின்போது பாலத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

மும்பையில் எல்.பி.எஸ். சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், ஜாண்சன் & ஜாண்சன் ஆலை அருகே சனிக்கிழமை(பிப். 14) பகல் 12.15 மணியளவில் மெட்ரோ மேம்பால கட்டுமானத்தின் ஸ்லாப் பாரம் தாளாமல் இடிந்து கீழே சாலையில் சென்ற வாகனங்கள் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில், அவ்வழியாகச் சாலையில் சென்ற ஆட்டோ ரிக்ஷா ஒன்றும் கார் ஒன்றும் அடையாளம் தெரியாமல் உருக்குலைந்தன. அதில், ஆட்டோவில் இருந்த ராம்தன் யாதவ் என்ற பயணி உயிரிழந்தார். மேலும் மூவர் படுகாயமடைந்தனர். அதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ கட்டுமானப் பணியாளர்களின் தவறே அந்தக் கட்டுமானம் இடிந்து விழக் காரணம் என்று மும்பை மெட்ரோபாலிடன் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் (எம்எம்ஆர்டிஏ) மீதும் ஒப்பந்ததாரரின் அலட்சியமுமே காரணம் என்ரு அப்பகுதி எம்எல்ஏ ஆதாரத்துடன் குற்றச்சாட்டு சுமத்தினார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் அவரது குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உரிய சிகிச்சையளிக்கப்படுவதுடன் மருத்துவச் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தெரிவித்தார்.

summary

1 dead, 3 injured as parapet segment of Metro bridge crashes; Oppn asks if lives of Mumbaikars hold no value

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.