தாணே: நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மருத்துவர் ஓட்டிச்சென்ற கார் மோதல்; 6 பேர் காயம்
தாணேவில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மருத்துவர் ஓட்டிச்சென்ற கார் மோதியதில் 6 பேர் காயமடைந்தனர்.
தாணேவில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மருத்துவர் ஓட்டிச்சென்ற கார் மோதியதில் 6 பேர் காயமடைந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தின் கல்யாண் பகுதியில், மருத்துவர் வேகமாக ஓட்டிச் சென்ற கார், நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்தனர். அவர்களில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், நாக்கு சக்கர வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று முதல் நான்கு வாகனங்கள் மீது மோதியது.
Advertisement
Advertisement
இதில் 6 பேர் காயமடைந்தனர். விபத்து தொடர்பாக மருத்துவர் சஞ்சய் பெண்டேல் கடக்பாடா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்தின் தாக்கம் மிகவும் கடுமையானதாக இருந்ததால், அருகில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.
பாதிக்கப்பட்டவர்களை உள்ளூர்வாசிகள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறு குறிப்பிட்டனர்.
At least six people were injured, two of them seriously, when a speeding car driven by a doctor rammed into multiple parked vehicles in the Kalyan area of Maharashtra's Thane district, police said on Thursday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.