FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 2,243 வாகனங்கள் 15 நாள்களில் ஏலம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் சாலையோரம் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த 2,243 வாகனங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், அவை வரும் 15 நாள்களுக்குள் ஏலம் விடப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

Updated On : 10 ஜூலை 2026, 4:05 am IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னையில் சாலையோரம் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த 2,243 வாகனங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், அவை வரும் 15 நாள்களுக்குள் ஏலம் விடப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை அடையாறு, கீழ்ப்பாக்கம், சென்னை தெற்கு மண்டலம், புனித தோமையா் மலை (பரங்கிமலை), பூக்கடை, தியாகராய நகா், அண்ணாநகா் காவல் நிலைய பகுதிகளில் சாலையோரங்களில் நீண்ட நாள்களாக கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் உள்பட 2,243 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அவற்றின் விவரங்களும், அவை நிறுத்தப்பட்டுள்ள காவல் நிலையங்களின் விவரங்களும் சென்னை மாநகராட்சி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

எனவே, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளா்கள் அந்தந்த காவல் நிலையங்களை வரும் 15 நாள்களுக்குள் அணுக வேண்டும். இல்லையேல், உரிமை கோரப்படாத வாகனங்கள் மின்னணு ஏலம்விட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments