FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

திருப்பூர் அருகே கார் - லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலி, 5 பேர் காயம்

செங்கப்பள்ளி அருகே கேஸ் டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர், 5 பேர் காயமடைந்தது தொடர்பாக...

Updated On : 18 ஜூலை 2026, 9:50 am IST
திருப்பூர் அருகே கார் - லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலி - கோப்புப்படம்
பகிர்:

திருப்பூர்: செங்கப்பள்ளி அருகே கேஸ் டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர், 5 பேர் காயமடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம், செங்கப்பள்ளி அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணியில் இருந்து ஊட்டி நோக்கி சுற்றுலா சென்றுகொண்டிருந்த இகோ கார், கேஸ் டேங்கர் லாரியை முந்த முயன்றபோது கேஸ் டேங்கர் லாரி காரின் பின்னே பலமாக மோதியதில் முன்னே சென்று கொண்டிருந்த மற்றொரு லாரியில் கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், காரில் இருந்த 4 ஆண்கள், 4 பெண்கள் என 8 பேரில் இரண்டு ஆண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலத்த காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இரண்டு பேர் ஊத்துக்குளி அரசு மருத்துவமனையிலும், மூன்று பேர் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

Advertisement

விபத்தில் விஜய் (30), அவரது மனைவி தேன்மொழி (26), குமார் (36) ஆகியோர் இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல் உடல்கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

summary

3 killed, 5 injured in car-lorry collision near Tiruppur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments