தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கும் பணிக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கவும், தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தவும் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
அதன்படி, அதியமான்கோட்டை, அதகப்பாடி, நல்லம்பள்ளி கிராமங்களில் சிப்காட் தொழில் பூங்கா அமைகிறது. நில எடுப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம்: கமல்ஹாசன்
இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தில் அமையவுள்ள சிப்காட் தொழில் பூங்கா பணிகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
தருமபுரி சிப்காட் தொழில் பூங்காவின் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.14.08 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படவுள்ளது. பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தருமபுரி சிப்காட்டில் மின்சார வாகனம், பேட்டரி உற்பத்தி நிறுவனங்களுக்கு 27.49% நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.