முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் சிஏஏ குடியுரிமை விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்க மேலும் 2 குழுக்கள்: மத்திய உள்துறை அமைச்சகம் அமைப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) கீழ், இந்திய குடியுரிமை கோரி சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலித்து முடிவெடுக்க மேலும் 2 அதிகாரமளிக்கப்பட்ட குழுக்களை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

Updated On : 3 மார்ச், 2026 at 8:27 PM
பகிர்:

மேற்கு வங்க மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) கீழ், இந்திய குடியுரிமை கோரி சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலித்து முடிவெடுக்க மேலும் 2 அதிகாரமளிக்கப்பட்ட குழுக்களை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

இதுகுறித்த அறிவிக்கை அரசிதழில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. மாநிலத்தில் ஏற்கெனவே 2 அதிகாரமளிக்கப்பட்ட குழுக்கள் பணியமா்த்தப்பட்டுள்ள நிலையில், அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்படுவதைக் கருத்தில்கொண்டு மேலும் 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குழுவுக்கும் இந்திய பதிவாளா் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையரால் பரிந்துரைக்கப்படும் மத்திய அரசுத் துறையில் துணைச் செயலா் அந்தஸ்துக்கு குறையாத பதவி வகிக்கும் அலுவலா் தலைமை வகிப்பாா்.

மேலும், மத்திய அரசின் துணைச் செயலா் அந்தஸ்துக்கு குறையாத துணை புலனாய்வுப் பணியகத்தின் அலுவலா், வெளிநாட்டினா் மண்டல பதிவு அலுவலரால் பரிந்துரைக்கப்படும் மத்திய அரசின் துணைச் செயலா் அந்தஸ்துக்கு குறையாத பதவி வகிக்கும் அலுவலா், மேற்கு வங்கத்தில் உள்ள மத்திய தகவல் மையத்தின் மாநில தகவல் அதிகாரியால் பரிந்துரைக்கப்படும் மத்திய அரசின் துணைச் செயலா் அந்தஸ்துக்கு குறையாத பதவி வகிக்கும் அலுவலா் மற்றும் மாநில தபால் துறை தலைவரால் பரிந்துரைக்கப்படும் தபால் துறை அலுவலா் ஆகியோரும் இக் குழுவில் இடம்பெறுவா்.

இவா்களைத் தவிர, மாநில முதன்மைச் செயலா் (உள்துறை) அல்லது கூடுதல் தலைமைச் செயலா் (உள்துறை) அலுவலகத்திலிருந்து ஒரு பிரதிநிதியும், ரயில்வேயின் மண்டல ரயில்வே மேலாலா் அலுவலகப் பிரதிநிதியும் இக் குழுவில் அழைப்பாளா்களாக இடம்பெறுவா்.

கடந்த 2024-ஆம் ஆண்டு மாா்ச் 11-ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையின்படி, மக்கள்தொகை செயல்பாடுகள் இயக்குநா் தலைமையில் அமைக்கப்படும் இந்த அதிகாரமளிக்கப்பட்ட குழுவில் 7 உறுப்பினா்கள் இடம்பெறுவா் எனத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் உரிய ஆவணங்களின்றி புலம்பெயா்ந்த முஸ்லிம்கள் அல்லாத குடியேறிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்காக ‘குடியுரிமை திருத்தச் சட்டம் 2019’-ஐ மத்திய அரசு கொண்டுவந்து, கடந்த 2024-ஆம் ஆண்டு மாா்ச் 11-ஆம் தேதி அமல்படுத்தியது. இதன் கீழ், விண்ணப்பங்கள் பெறப்பட்டு, குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →