முகப்பு
இந்தியா

சமூக ஊடகத்திலிருந்து தனிப்பட்ட தகவல் திரட்டப்படவில்லை: மத்திய உள்துறை அமைச்சகம்

சமூக ஊடகத்தில் இருந்து தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பு முகமைகள் திரட்டுவதில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 ஏப்ரல் 2026, 12:46 am IST
மத்திய உள்துறை அமைச்சகம்
பகிர்:

சமூக ஊடகத்தில் இருந்து தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பு முகமைகள் திரட்டுவதில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக நாடாளுமன்றத் தகவல் தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிலைக் குழுவிடம் மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை சமா்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இணையதளம் மற்றும் சமூக ஊடக தளங்களில் அனைவருக்கும் தெரியும் வகையில் பொது வெளியில் உள்ள தகவல்களைத்தான் உளவுத்துறை திரட்டுகிறது. சமூக ஊடகத்தில் இருந்து தனிப்பட்ட அல்லது அந்தரங்க தகவல் எதுவும் திரட்டப்படுவதில்லை. இதில் தன்மறைப்பு நிலை (பிரைவஸி) மீறப்படவில்லை.

இவ்வாறு பொது வெளியில் உள்ள தகவல்களைத் திரட்டும் வழிமுறையானது இணையவழி, வேலைவாய்ப்பு, முதலீடு, திருமண மோசடிகளை கண்டறிவதற்கான இணைய இணைப்புகள், வலைதளங்களைக் கண்காணிக்க உதவும்.

Advertisement

உளவுத் தகவல்களைத் திரட்டும் திறன்களை மேம்படுத்திக் கொள்வதிலும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளிலும் பாதுகாப்பு முகமைகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.