அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!
இரவு 10 மணி வரை சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை.
தற்போதைய செய்திகள்அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!
இரவு 10 மணி வரை சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை.
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது அடுத்த 2 நாள்களில் மேற்கு திசையில், தமிழக-இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 3 அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு: தமிழக அரசு
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 10 மணி வரை) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.