மார்க்கோ ஆங்குலோ 
தற்போதைய செய்திகள்

விபத்தில் சிக்கிய 22 வயது கால்பந்து வீரருக்கு நேர்ந்த சோகம்!

விபத்தில் சிக்கிய ஈகுவடார் அணி கால்பந்து வீரருக்கு நேர்ந்த சோகம்...

DIN

ஈகுவடார் மற்றும் எஃப்சி சின்சினாட்டி அணிக்காக விளையாடிய கால்பந்து வீரர் மார்க்கோ ஆங்குலோ கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். அவருடன் சென்ற மற்றொரு கால்பந்து வீரர் ராபர்டோ கபேசாஸ் ஏற்கனவே பலியான நிலையில் இவரும் பலியானது கால்பந்து ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

22 வயதான மார்க்கோ ஆங்குலோ குயிட்டோவின் தென்கிழக்கு ருமினுகாய் நெடுஞ்சாலையில் பயணித்த கார் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சிக்கிய டிரைவர் மற்றும் மற்றொரு கால்பந்து வீரர் ராபர்டோ கபேசாஸ் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தலையில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட மார்க்கோ ஆங்குலோ நுரையீரலில் அடைப்பு ஏற்பட்டதுடன், ஒரு மாதமாக கோமாவில் இருந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக திங்கள்கிழமை காலமானார்.

அங்குலோ ஈக்வடார் லீக் சாம்பியனான எல்டியூக்காக விளையாடினார். எஃப்சி சின்சினாட்டி எம்எல்எஸ் அணியிடமிருந்து க்யூட்டோ அணிக்காகவும் விளையாடினார்.

மார்க்கோ ஆங்குலோ 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இராக் அணிக்கு எதிரான போட்டியில் ஈகுவடார் அணிக்காக விளையாடினார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடினார். அதற்கு முன்னதாக, ஈகுவடார் அணிக்கு 17, 20 வயதுக்குள்பட்டோர் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT