பிக் பாஸ் - 8 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி. 
தற்போதைய செய்திகள்

பிக் பாஸ் 8: இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்...

DIN

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. வைல்டு கார்டு போட்டியாளர்கள் ஆட்டத்தை மாற்ற ஆரம்பித்துள்ளதால், நிகழ்ச்சி விறுவிறுப்பாக செல்கிறது.

இந்த வாரம், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பள்ளிக்கூட டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி மாணவர்களைப் போன்றும், ஆசிரியர்களைப் போன்றும் வேடமிட்டு நடித்தனர்.

அவர்களின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. நேற்றைய நிகழ்ச்சியில் தொகுப்பாளர் விஜய் சேதுபதியும் போட்டியாளர்களைப் பாராட்டினார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆறு வாரங்களை கடந்துள்ள நிலையில், மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெற்றதன் அடிப்படையில் இந்த வாரம் யூடியூபர் ரியா வெளியேற்றப்பட்டதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

வைல்டுகார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்கு வந்த யூடியூபர் ரியா 2 வாரங்களில் வெளியேறியுள்ளார். மேலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வத் தகவல் இன்றிரவு ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெரியவரும்.

கடந்த வாரங்களில் தயாரிப்பாளர் ரவீந்திரன், அர்ணவ், தர்ஷா குப்தா, சுனிதா ஆகியோர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT