பிக் பாஸ்: 50வது நாளில் மீண்டும் நுழையும் பழைய போட்டியாளர்!
பிக் பாஸ் வீட்டுக்கு செல்லும் பழைய போட்டியாளர்.
பிக் பாஸ் வீட்டுக்கு 50 வது நாளில், இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர் ஒருவர் மீண்டும் செல்லவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்களைக் கடந்து தற்போது 8வது சீசன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி தனக்கே உரித்தான பாணியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக் பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
Advertisement
Advertisement
இந்நிகழ்ச்சி 43 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில், ரசிகர்களின் விறுவிறுப்பை கூட்டுவதற்காக, இந்த வார இறுதியில், அதாவது 50-வது நாளில் முன்னதாக வெளியேறிய போட்டியாளர் ஒருவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி, வைல்டுகார்டு மூலம் 6 போட்டியாளர்கள் நுழைந்தனர். கடந்த வாரங்களில் தயாரிப்பாளர் ரவீந்திரன், அர்ணவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா ஆகியோர் வெளியேறிய நிலையில், தற்போது 19 பேர் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டுக்கு தர்ஷா குப்தா அல்லது அர்ணவ் மீண்டும் செல்லவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இதனால் நிகழ்ச்சி விரைவில் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சீசன்களில் வனிதா விஜயகுமார், விஜய் வர்மா ஆகியோர் வெளியேற்றப்பட்டு, மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.