ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாய தொழிலாளி பலி 
தற்போதைய செய்திகள்

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாய தொழிலாளி பலி

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாய தொழிலாளி உயிரிழந்தார் .

DIN

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாய தொழிலாளி உயிரிழந்தார் .

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் மகன் தங்க ராஜா (55). விவசாய கூலித் தொழிலாளியான இவர் அந்த குதியில் உள்ள ராமசாமி என்பவரது தோட்டத்தில் விவசாய பணிக்காக சென்றார்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை அந்த பகுதியில் மிதமான மழை பெய்தது. அப்போது, தொழிலாளி தங்க ராஜா மின்மோட்டாரை இயக்கும்போது மின்சாரம் கசிந்து அவர் மேல் பாய்ந்தது. இதில் தங்க ராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

வீர கேரளம் புதூர் காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நவ. 6-இல் வாக்குப்பதிவு: பிரசாரம் முடிவு!

ஐஸ் குல்பி... சாக்‌ஷி மாலிக்!

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’? வாக்குப்பதிவு தொடங்கியது!

சினேகிதியே... அதுல்யா ரவி!

SCROLL FOR NEXT