அமரன்: வெண்ணிலவு சாரல் நீ விடியோ பாடல்!
வெண்ணிலவு சாரல் நீ விடியோ பாடல் இணையத்தில் வைரல்.
அமரன் படத்தில் இடம்பெற்றுள்ள வெண்ணிலவு சாரல் நீ விடியோ பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
சிவகார்த்திகேயனின் முதல் ரூ. 250 கோடி வசூல் செய்த படமாக இப்படம் சாதனைப் படைத்தது.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்துக்கு, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், அமரன் படத்தில் இடம்பெற்றுள்ள வெண்ணிலவு சாரல் நீ விடியோ பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
இப்பாடலுக்கு யுகபாரதி வரிகளை எழுத, கபில் கபிலன் மற்றும் ரக்ஷிதா சுரேஷ் பாடியுள்ளனர்.