ஜான்வி கபூரின் பிறந்த நாளில் பெத்தி படக்குழு வெளியிட்ட விடியோ!
நடிகை ஜான்வி கபூரின் பிறந்த நாளில் வெளியான விடியோ குறித்து...
நடிகை ஜான்வி கபூரின் பிறந்த நாளில் பெத்தி படத்தின் படப்பிடிப்பு விடியோ வெளியாகியுள்ளது.
நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள பெத்தி திரைப்படம் ஏப்ரல் 30 ஆம் தேதியன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஸ்ரீதேவி - போனி கபூருக்கு மகளாகப் பிறந்த ஜான்வி கபூர் 2018ல் தடாக் எனும் படத்தில் நாயகியாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்கும் இவர் கடைசியாக 2025ல் இரண்டு பாலிவுட் படங்களில் நடித்திருந்தார்.
Advertisement
Advertisement
தற்போது, தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் பெத்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்ற, சிக்கிரி பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்நிலையில், ஜான்வி பிறந்த நாளில் ஆச்சியம்மா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பெத்தி பட படப்பிடிப்பு விடியோவை இயக்குநர் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.
Janhvi Kapoor birthday special video released by Peddi film crew.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.