FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜெயிலர் - 2 படத்தில் வித்யா பாலன்! அறிமுக விடியோ வெளியீடு!

ஜெயிலர் - 2 படத்தில் நடிகை வித்யா பாலன் நடிக்கும் நிலையில் அவரது அறிமுக விடியோ வெளியானது.

20 செப்டம்பர் 2026, 6:45 pm IST
ஜெயிலர் - 2 படத்தில் வித்யா பாலன்
பகிர்:

ஜெயிலர் - 2 படத்தில் நடிகை வித்யா பாலன் நடிக்கும் நிலையில் அவரது அறிமுக விடியோ வெளியானது.

summary

ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படம் உருவாகியுள்ளது.

ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, யோகி பாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

சில நாள்களுக்கு முன் வெளியான இப்படத்தின் முதல் பாடலான, ’அல்ல பொலேலோ’ நல்ல வரவேற்பைப் பெற்று வைரலானது.

ஜெயிலர் - 2 படத்தில் சிறப்புத் தோற்றத்தில் இந்தியத் திரையுலகின் பிரபல நடிகர்கள் பலர் நடிப்பதாகக் கூறப்படும் நிலையில், ஒவ்வொருவரின் அறிமுக விடியோவையும் படக்குழு தினமும் வெளியிட்டு வருகின்றது.

முன்னதாக, திலீப் என்கிற கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சரமூடு, போதி என்கிற கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாக அறிமுக விடியோக்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து, இன்று நடிகை வித்யா பாலன் ’காந்தா’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழுவினர் அறிமுக விடியோவை வெளியிட்டுள்ளனர்.

ஜெயிலர் - 2 திரைப்படம் இந்தாண்டு அக்டோபர் 15 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

summary

Vidya Balan in Jailer 2! Introduction video released!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments