FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜெயிலர் 2 படத்தில் எஸ்.ஜே. சூர்யா..! வைரலாகும் அறிமுக விடியோ!

நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ஜெயிலர் 2 படத்தில் நடித்துள்ள எஸ்.ஜே. சூர்யா விடியோ குறித்து...

20 செப்டம்பர் 2026, 3:43 pm IST
ஜெயிலர் 2 படத்தில் எஸ்.ஜே. சூர்யா - படம்: எக்ஸ் / சன் பிக்சர்ஸ்
பகிர்:

நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ஜெயிலர் 2 படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் அறிமுக விடியோ கவனம் ஈர்த்து வருகிறது.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் இந்தாண்டு அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளதால் அதற்கான வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

முதல் பாடலான, ’அல்ல பொலேலோ’ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அனிருத் இசையமைப்பில் நடிகை பூர்ணா நடனத்தில் உருவான இப்பாடல் இன்ஸ்டாகிராமிலும் டிரெண்டிங் ஆனது.

Advertisement

Advertisement

இந்தப் படத்தில், போதி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார். இவரது அறிமுக விடியோவை வெளியிட்டு படக்குழு ஆச்சரியம் அளித்துள்ளது.

முதல் பாகத்தில் விநாயகன் வில்லனாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் முதன்மையான வில்லனாக யார் நடித்துள்ளார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை. சுராஜ், எஸ்.ஜே. சூர்யா, விஜய் சேதுபதி நடித்துள்ளதால் சுவாரசியம் அதிகரித்துள்ளது.

ஜெயிலர் - 2 திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் மாதம் தள்ளிப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், அக். 15 ஆம் தேதிதான் இப்படம் வெளியாகும் என்பதை இந்த விடியோவிலும் உறுதிப்படுத்தியுள்ளது.

summary

Introducing SJ Suryah as Bodhi from the world of Jailer 2

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments