கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

சாக்கு மூட்டையில் தலித் பெண்ணின் உடல்: பாஜகவுக்கு ஆதரவளித்ததால் கொலையா?

கொலை சம்பவம் தொடர்பாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு.

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் கர்ஹல் தொகுதியில் 23 வயது பிற்படுத்தப்பட்ட பெண்ணின் சடலம், சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கர்ஹல் தொகுதியில் இன்று(நவ. 20) இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடாது என்று சமாஜவாதி கட்சி நிர்வாகி ஒருவர் அழுத்தம் கொடுத்தத்தைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இறந்த பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் பிரசாந்த் யாதவ் மற்றும் மோகன் கத்தேரியா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அந்தப் பெண்ணை கொலை செய்ததாக இறந்த பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டியதாக மெயின்புரி மாவட்ட காவல் துறை அதிகாரி வினோத் குமார் தெரிவித்தார்.

பெண்ணின் தந்தை கூறுகையில், “மூன்று நாள்களுக்கு முன்பு பிரசாந்த் யாதவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து நீங்கள் எந்த கட்சிக்கு வாக்களிக்க விரும்புகிறீர்கள் என்று என் மகளை கேட்டார். என் மகள் தாமரை சின்னத்துக்கு வாக்களிக்கவுள்ளதாகவும், ஏனென்றால் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் எங்களுக்கு வீடு கிடைத்துள்ளதாகவும் என் மகள் கூறினார்.

ஆனால் அவர்கள், சமாஜவாதி கட்சியின் சின்னமான சைக்கிள் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்து என் மகளை மிரட்டினார்கள்.” என்று தெரிவித்தார்.

தலித் பெண் இறப்பு தொடர்பாக பாஜக, சமாஜவாதி கட்சியை கடுமையாக சாடியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 9 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT