கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

டிசம்பர் 2 ஆவது வாரத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டம்..?

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வருகிற டிசம்பர் 2 ஆவது வாரத்தில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

DIN

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வருகிற டிசம்பர் 2 ஆவது வாரத்தில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் நிதிநிலை மானியக் கோரிக்கைகளுக்காக ஜூன் 20 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து நிதிநிலை அறிக்கைகள் மீதும் பல்வேறு கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினா்களின் விவாதம் நடைபெற்று முடிந்து, துறை சோ்ந்த சாா்ந்த அமைச்சா்களும் பதில் அளித்து உரையாற்றினா். அதையடுத்து பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

பேரவை விதிகளின்படி பேரவையின் ஒரு கூட்டம் முடிந்தால், அடுத்த 6 மாதங்களுக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், வரும் டிசம்பர் இறுதிக்குள் பேரவை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

இந்த நிலையில், வரும் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் பேரவை கூட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் பேரவை கூட்டம் நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரவைத் தலைவர் ஆஸ்திரேலியா சிட்னி நகரில் நடைபெற்ற 67 ஆவது காமன் வெல்த் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு தமிழகம் திரும்பியுள்ளார்.

இரண்டொரு நாள்களில் அவர் முதல்வருடன் ஆலோசித்துவிட்டு பேரவை கூட்டத்துக்கான தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என தலைமைச் செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொந்த வீடு இல்லாதது குற்றமா? 3 பிஎச்கே சொல்ல வருவது என்ன?

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

SCROLL FOR NEXT