கோவை சா்வதேச விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தருண் மாலிக். 
தற்போதைய செய்திகள்

கோவை விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்தவரால் பரபரப்பு

சா்வதேச விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

DIN

கோவை சா்வதேச விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த நபர் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினா் பிடித்து பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படைப் பிரிவு சி.ஐ.எஸ்.எப் ஆய்வாளராக பணி புரியும் குமார் ராஜ் பரதன் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது தடை செய்யப்பட்ட பகுதிக்குள் ஒருவர் அனுமதியின்றி நுழைந்து இருப்பதை கண்டறிந்தார். உடனடியாக அவரை பிடித்து ஆய்வாளர் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அந்த நபர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தருண் மாலிக் என்பதும், அவர் நகை தொழில் செய்து வருபவர் என்பதும் தெரிய வந்தது. பின்னர் தருண் மாலிக்கை பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பீளமேடு காவல் துறையினர் அவரை கைது செய்து, விமான நிலைய பாதுகாப்பு வளையத்திற்குள் அனுமதியின்றி நுழைந்ததற்கான காரணம்? அவரது நோக்கம்? ஆகியவற்றை குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சா்வதேச விமான நிலையத்திலிருந்து நாள்தோறும் 35-க்கும் மேற்பட்ட விமானங்கள் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன. இதனால், விமான நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனா்.

இதற்கிடையே கடந்த சில மாதங்களாக விமான நிலையத்துக்கு அடிக்கடி வரும் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, அண்மைக் காலமாக அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, போலீஸ் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விமான நிலையத்தின் பாதுகாப்பு வளையத்திற்குள் அனுமதியின்றி திடீரென ஒரு நபா் நுழைந்த சம்பவம் விமான நிலையம் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT