கஞ்சா கடத்தலில் கைது செய்யப்பட்டவர்கள். 
தற்போதைய செய்திகள்

லாரியில் ரகசிய அறை வைத்து கஞ்சா கடத்தல்: 300 கிலோ கஞ்சா பறிமுதல், 3 பேர் கைது

லாரியில் ரகசிய அறை வைத்து ஆந்திர மாநிலத்தில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு கடத்தி வந்த 300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த சிறப்பு தனிப்படை போலீசார்

DIN

லாரியில் ரகசிய அறை வைத்து ஆந்திர மாநிலத்தில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு கடத்தி வந்த 300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த சிறப்பு தனிப்படை போலீசார், இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே முடச்சிக்காடு கலைஞர் நகர் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக தஞ்சாவூர் சிறப்பு தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவை காருக்கு சிலர் மாற்றிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து, லாரியில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சா, கடத்தலில் ஈடுபட்ட இரண்டு வாகனங்கள் மற்றும் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.

போலீசார் பறிமுதல் செய்துள்ள கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, கார்.

விசாரணையில், ஆந்திரம் மாநிலத்தில் இருந்து,லாரியின் பெட்ரோல் டேங்க் உள்ள பகுதியில் ரகசிய அறை அமைத்து அதில் சுமார் 300 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரிந்தது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இது தொடர்பாக, பேராவூரணி அருகே காரங்குடா பகுதியை சேர்ந்த அண்ணாதுரை (44), அம்மணி சத்திரம் பகுதியை சேர்ந்த முத்தையா (60), தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த தர்மராஜ் (34) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்தாவூர் மாவட்ட ஆஷிஷ் ராவத், கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிரார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

SCROLL FOR NEXT