ஏக்நாத் ஷிண்டே படம்: ANI
தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிர மக்களுக்கு நன்றி: ஏக்நாத் ஷிண்டே

சிவசேனை தொண்டர்களுடன் வெற்றிக் கொண்டாடிய ஏக்நாத் ஷிண்டே.

DIN

மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிர வாக்காளர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக தலைமையிலான மகா யுதி கூட்டணி, மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பெரும்பான்மை பெறத் தேவையான தொகுதிகளை விடவும் அதிகமான தொகுதிகளில் அதாவது 200 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதன் மூலம், வெற்றி உறுதி செய்யப்பட்டிருப்பதாகவே கூறப்படுகிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

மகாராஷ்டிர வாக்காளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது மாபெரும் வெற்றி. மகா யுதி கூட்டணிக்கு அமோக வெற்றிக் கிடைக்கும் என்று முன்பே தெரிவித்து இருந்தேன். அனைத்து சமூக மக்களுக்கும் எனது நன்றி. மகா யுதி கூட்டணி தொண்டர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பேசினார்.

இதனையடுத்து, ஏக்நாத் ஷிண்டே மற்றும் சிவசேனை தலைவர்கள் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

டபுள் டெக்கா் பேருந்து சேவையை தொடக்கி வைத்தார் முதல்வா் ஸ்டாலின்

அன்புமணி ஆதரவு 3 எம்.எல்.ஏ-க்கள் பாமகவில் இருந்து நீக்கம்

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-62!

தமிழகத்திலிருந்து வந்த ரசமலாய்! பாம்பே என்று பேசிய அண்ணாமலையை விமர்சித்த ராஜ் தாக்கரே

SCROLL FOR NEXT