சூர்யா 45 படக்குழுவினர் மாசாணி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தபோது பொதுமக்கள் ஏராளமானோர் கூடியதால் பரபரப்பு நிலவியது.  
தற்போதைய செய்திகள்

மாசாணி அம்மன் கோவிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம்: கோவில் வளாகத்தில் பரபரப்பு

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாசாணி அம்மன் கோவிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம் செய்தார்.

DIN

கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாசாணி அம்மன் கோவிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம் செய்தார். திடீரென நடிகர் சூர்யா கோவிலுக்கு வந்ததால் பொதுமக்கள் ஏராளமானோர் தங்களது செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டனர். இதனால் கோவில் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

தமிழகத்தில் மிகவும் பிரபலமான கோவில்கள் ஒன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் புகழ்பெற்ற மாசாணி அம்மன் கோயில் உள்ளது. கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டார பகுதிகளில் திரைப்பட படபிடிப்பு நடக்கும் போது இந்த கோவிலுக்கு நடிகர்கள், நடிகைகள் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகைச்சுவை நடிகர் யோகி பாபு கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து சென்றார்.

இந்த நிலையில், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தயாரிக்கும் சூர்யா 45 என்ற புதிய படத்திற்கான படப்பிடிப்பு ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கவுள்ள நிலையில்,படக்குழுவினர் மாசாணி அம்மன் கோவிலில் புதன்கிழமை சாமி தரிசனம் செய்து தொடங்கினர்.

முன்னதாக, கோவில் வளாகத்திற்கு வந்த நடிகர் சூர்யாவை கோவில் செயல் அலுவலர் அழைத்துச் சென்றார். அறங்காவலர் குழு முரளி கிருஷ்ணன் சூர்யாவை வரவேற்று அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

தற்போது மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 12 ஆம் தேதி நடைபெற உள்ளதால் பணிகள் நடைபெற்று வருவதால் மாசாணியம்மன் பாலாயம் செய்யப்பட்ட இடத்தில் சூர்யா சாமி தரிசனம் செய்தார்.

திடீரென நடிகர் சூர்யா கோவிலுக்கு வந்ததால் பொதுமக்கள் ஏராளமானோர் தங்களது செல்போன்களில்

செல்பி எடுத்துக் கொண்டனர். இதனால் கோவில் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

ஒரு ஈரோடு செல்ஃபி எடுப்போமோ? மாஸ் காட்டிய விஜய்

SCROLL FOR NEXT