கோடியக்கரை படகு துறையில் மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்து செல்லும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்ட மீனவர்கள். 
தற்போதைய செய்திகள்

தொடர் கனமழை, அச்சுறுத்தும் புயல் : கோடியக்கரையில் படகுகளை பாதுகாக்கும் மீனவர்கள்

அச்சுறுத்தும் புயலின் காரணமாக கோடியக்கரை கடலோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந் த கனமழை சற்று ஓய்ந்துள்ள நிலையில், அச்சுறுத்தும் புயலின் காரணமாக கோடியக்கரை கடலோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வேதாரண்யத்தில் ஏற்பட்ட தொடர் மழையின் காரணமாக காந்திநகர் பகுதியில் மானாவரி நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பா நெல்பயிரை சூழ்ந்துள்ள மழை நீர்.

வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை நீடித்து வந்தது, புதன்கிழமை மாலை முதல் மழை சற்று ஓய்ந்த போதிலும் வழக்கத்தை விட பலமான தரைக்காற்றுடன் அவ்வப்போது லேசான மழைப்பொழிவு இருந்து வருகிறது.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் ஏற்பட்ட தொடர்மழையின் காரணமாக மருதூர் தெற்கு - பஞ்சநதிக்குளம் கிராமங்களுக்கு இடையே மானங்கொண்டான் ஆற்றின் குறுக்கே மரப்பாளத்தை சூழ்ந்து தண்ணீர் வடிவதை தடுத்து வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகள்

கோடியக்கரையில் கடல் சீற்றமாக காணப்படுவதால் வழக்கமாக படகுகள் நிறுத்துமிடத்தில் கடல் நீர் உள்புகுந்தது. இதனால், கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த 400-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

’கோ பேக் ராகுல்’... கான்வாயை மறித்து உ.பி. அமைச்சர் போராட்டம்!

கத்தாரில் தாக்குதல்! அரபு நாடுகளையும் குறிவைக்கிறதா இஸ்ரேல்?

மனம் தவிக்கிறது... நந்திதா ஸ்வேதா!

நேபாள ஆணிவேர் சிங்கா மாளிகை தீக்கிரை! ஜென் ஸி கோபத்தின் விலை! தொடர்ந்து வந்த துயரம்!!

அறிமுகமானது ஐபோன் 17! முன்பதிவு செய்தால் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT