இந்திய வானிலை ஆய்வு மையம்  
தற்போதைய செய்திகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை தமிழக-புதுச்சேரிக்கு இடையே கரையை கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சனிக்கிழமை காலை(நவ.30) தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இடையே தாழ்வு மண்டலமாக கரையை கடக்க வாய்ப்பு

DIN

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சனிக்கிழமை காலை(நவ.30) தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இடையே தாழ்வு மண்டலமாக கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 9 கி.மீ வேகத்தில் வடக்கு-வடகிழக்கு நோக்கி வேகத்தில் நகரத் தொடங்கியுள்ளது

இது இலங்கை திருகோணமலைக்கு வடகிழக்கு திசையில் 240 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து கிழக்கு-தென்கிழக்கு திசையில் 330 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கு திசையில் 390 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 430 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது வடமேற்கு நோக்கி நகர்ந்து, நவம்பர் 29 வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிக்கும்.

தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, சனிக்கிழமை(நவ.30) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே வட தமிழகம்-

புதுச்சேரிக்கு இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடல்வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டியது தலையாய கடமை: அமைச்சர் எ.வ.வேலு

சிவப்பு கம்பள வரவேற்பு... பிரணிதா!

மிடில் ஆர்டரில் கவனம் தேவை, இந்தியாவின் சவாலுக்குத் தயார்: பாகிஸ்தான் கேப்டன்

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

21 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT