பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய ஆயுதப்படை காவலர்கள். 
தற்போதைய செய்திகள்

புதுக்கோட்டையில் பாஜக, அதிமுக நிர்வாகிகள் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை

புதுக்கோட்டையில் பாஜக மாவட்ட பொருளாளர், அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பாஜக மாவட்ட பொருளாளர், அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை சார்லஸ் நகரைச் சேர்ந்த பாஜக பிரமுகர் முருகானந்தம் மற்றும் அவரது அவரது சகோதரரும், அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்டச் செயலாளருமான கறம்பக்குடி கடுக்காகாட்டைச் சேர்ந்த பழனிவேல், ஆலங்குடி நகரைச் சேர்ந்த பழனிவேல் ஆகிய மூவரது வீடுகளில் அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டையில் பாஜக , அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்த காரில் வந்துள்ள அமலாக்கத் துறையினர் .

இந்தச் சோதனையில் மத்திய ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசு ஒப்பந்தப்பணிகளை இவர்கள் எடுத்து செய்துவந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாச்சியாா்கோவில் அதிமுக நிா்வாகி கொலை வழக்கில் மேலும் 2 போ் கைது

அதிமுக- பாஜக கூட்டணியே திமுகவுக்கு மாற்று: ஹெச். ராஜா

முதியோா் இல்லத்தில் இருந்தவா் மாயம்

‘புதுக்கோட்டையில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும்’

பெரியாா் ஈவெரா பிறந்த நாள் விழா: கட்சியினா் மரியாதை

SCROLL FOR NEXT