முகப்பு
தற்போதைய செய்திகள்

அயர்லாந்து ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்!

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா தடுமாறி வருகிறது.

Updated On : 2 அக்டோபர், 2024 at 12:42 PM
பகிர்:

அயர்லாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா தடுமாறி வருகிறது.

தென்னாப்பிரிக்கா-அயர்லாந்து அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அமீரகத்தின் அபுதாபியில் உள்ள சேக் சையத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விக்கெட் கீப்பர் ரியான் ரிக்கெல்ட்சன் மற்றும் டோனி டி ஜார்ஜி களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 31 ரன்கள் சேர்த்த நிலையில் டோனி 12 ரன்களில் அவுட்டானார். அதன் பின்னர் ரன் வேகம் ஏறவேயில்லை. கேப்டன் பவுமா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். 2023 ஆம் ஆண்டு டிசம்பருக்கு பின்னர் அணியில் இணைந்த வாண்டர் டஸன் ரன் ஏதுமின்றி வெளியேறினார்.

தென்னாப்பிரிக்க அணி 12.4 ஓவர்களில்3 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்து பரிதாபகரமான நிலையில் இருக்கிறது.

கடந்த மாதம் கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தானிடம் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்த நிலையில் அயர்லாந்துக்கு எதிரான 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.