முகப்பு
கிரிக்கெட்

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 3:41 PM
ஆஸ்திரேலிய வீரர்கள். - படம் | AP
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 3:18 PM

ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையே 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்கள் நடைபெறவுள்ளது. இந்த தொடர்களுக்காக ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர்கள் வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத இடைவெளியில் நடைபெறுகின்றன. முதலில் ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.

Advertisement

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 3:35 PM

ஒருநாள் தொடர் விவரம்

செப்டம்பர் 24 - முதல் ஒருநாள் போட்டி, டர்பன்

செப்டம்பர் 27 - இரண்டாவது ஒருநாள் போட்டி, ஜோஹன்ஸ்பெர்க்

செப்டம்பர் 30 - மூன்றாவது ஒருநாள் போட்டி, பாட்செஃப்ஸ்டிரோம்

டெஸ்ட் தொடர் விவரம்

அக்டோபர் 9 - அக்டோபர் 13 - முதல் டெஸ்ட், டர்பன்

அக்டோபர் 18 - அக்டோபர் 22 - இரண்டாவது டெஸ்ட், குபெர்கா

அக்டோபர் 27 - அக்டோபர் 31 - மூன்றாவது டெஸ்ட், கேப் டவுன்

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 3:35 PM

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் லார்ட்ஸில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. அதன் பின், முதல் முறையாக இரண்டு அணிகளும் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி கடந்த 37 ஆண்டுகளில் முதல் முறையாக ஐசிசி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

summary

The Australian team will tour South Africa to play ODI and Test series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.