அரக்கோணம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் 
தற்போதைய செய்திகள்

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: பெரும் விபத்து தவிர்ப்பு

அரக்கோணம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ரயில்வே ஊழியர் உரிய நேரத்தில் கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

DIN

அரக்கோணம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ரயில்வே ஊழியர் உரிய நேரத்தில் கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. உடனடியாக ரயிலை நிறுத்தி தற்காலிகமாக சீர் செய்யப்பட்டு திருவனந்தபுரம் சென்னை ரயில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை நோக்கி ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வழியாக செல்லும் திருவனந்தபுரம் தினசரி பயணிகள் விரைவு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் வியாழக்கிழமை காலை 5.20 மணி அளவில் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.

ரயில் காலை 5.20 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.28 மணிக்கு அரக்கோணம் ரயில் நிலையம் வந்தடைந்தது.

அதனைத் தொடர்ந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த போது, அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வழக்கத்துக்கு மாறாக திடீரென ஒருவித சப்தம் கேட்டது. இதனால், அங்கு பணியில் இருந்த ரயில்வே பணியாளர் ஒருவர் உடனடியாக அதனை கவனித்து ரயிலை நிறுத்துமாறு கத்தியதாக கூறப்படுகிறது.

ரயில் செல்லும் வேகத்திற்கு அது பலன் அளிக்காததால் உடனடியாக அபாய சங்கிலி பிடித்து இழுக்குமாறு பயணிகளிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து பயணி ஒருவர் அபாய சங்கிலியை இழுத்ததாக தெரிகிறது. உடனடியாக ரயில் புளியமங்கலம் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது.

பின்னர் சோதனை செய்தபோது தண்டவாளத்தில் பெரிய விரிசல் ஏற்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து ரயில்வே பணியாளா்களுக்கு தகவல் கொடுத்தாா். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை தற்காலிகமாக கருவிகளின் உதவியோடு சரி செய்யப்பட்டு, சுமாா் 30 நிமிடங்கள் தாமதத்துக்குப் பிறகு, முதற்கட்டமாக நிறுத்தி வைக்கப்பட்ட திருவனந்தபுரம் சென்னை ரயில் புறப்பட்டுச் சென்றது.

மேலும் பணியில் இருந்த ரயில்வே பணியாளர் உரிய நேரத்தில் அபாயத்தை உணர்ந்து சாதுரியமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

பயணிகள் அனைவரும் ரயில்வே பணியாளரை பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT