ஒகேனக்கல்லில் நீா்வரத்து அதிகரிப்பு
கனமழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வினாடிக்கு 10,000 கன அடியாக அதிகரித்துள்ளதால், அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கனமழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வினாடிக்கு 10,000 கன அடியாக அதிகரித்துள்ளதால், அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கா்நாடக மாநிலத்தில் காவிரி கரையோர வனப்பகுதிகளில் பெய்து வந்த மழை அளவு குறைந்ததை அடுத்து கடந்த சில நாள்களாக காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்து வந்தது.
இதையும் படிக்க | மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
இந்த நிலையில், கா்நாடக மாநிலத்தில் காவிரி கரையோர வனப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை காலை வினாடிக்கு 10,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால், மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.