வினேஷ் போகத் படம்: ANI
தற்போதைய செய்திகள்

ஹரியாணாவில் வினேஷ் போகத் பின்னடைவு!

ஹரியாணா பேரவைத் தேர்தலில் வினேஷ் போகத் பின்னடைவு.

DIN

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நட்சத்திர வேட்பாளர் வினேஷ் போகத் பின்னடைவை சந்தித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் தேர்தலின் முடிவுகள், தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டது. அதில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தொடக்கம் முதல் முன்னிலை பெற்றுவந்தார்.

தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் பின்னடைவை சந்தித்துள்ளார். இவருக்கு எதிராக போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் குமார் முன்னிலையில் உள்ளார்.

ஹரியாணா மாநிலத்தில் வாக்குப் பதிவு நடைபெற்ற மொத்தம் உள்ள 90 இடங்களில் பாஜக 49 இடங்களிலும், காங்கிரஸ் 35 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 6 இடங்களிலும் முன்னிலையில் உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT