கோப்புப்படம் ENS
தற்போதைய செய்திகள்

சென்னையில் அனைத்து மகளிர் விடுதிகளையும் பதிவு செய்ய உத்தரவு!

சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்களைப் பதிவு செய்ய உத்தரவு.

DIN

சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவற்றை வருகிற நவம்பர் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

அவ்வாறு பதிவு செய்யாத விடுதி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.50,000 அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்கு முறைச்சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015-ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பதிவுசெய்யப்படாத விடுதிகள் http://tnswp.com என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்யலாம்.

இப்பதிவு மேற்கொள்ள அறக்கட்டளை பதிவு பத்திரம், பார்ம்-டி லைசன்ஸ், சொந்த கட்டடம்/ வாடகை ஒப்பந்த பத்திரம், கட்டட வரைபடம், கட்டட உறுதிச்சான்று, தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்று, காவல்துறையின் சரிபார்ப்பு சான்று. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தின்(FSSAI) ஐடி மற்றும் கணக்காய்வு அறிக்கை (IT & Audit Statement) சுகாதாரத் துறைச் சான்று ஆகிய சான்றுகளுடன் http://tnswp.com என்ற இணையதளம் மூலமாக வருகிற நவம்பர் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இப்பதிவு குறித்து சந்தேகங்களுக்கு DSWO CUG 9150056800 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.

அவ்வாறு முறையாக பதிவு செய்யப்படாத தனியார் விடுதி மற்றும் இணை நிர்வாகிகள் மீது சட்டப்படி காவல்துறை மூலமாக வழக்குப்பதிவு செய்து அதிகபட்சமாக 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 50,000/- அபராதம் விதிக்கப்படும் என்ற விவரம் சென்னை மாவட்டத்தில் செயல்படும் மகளிர் விடுதிகளுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே இஆப. தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT