வெற்றி வசந்த் - வைஷ்ணவி படம்: இன்ஸ்டாகிராம்.
தற்போதைய செய்திகள்

சிறகடிக்க ஆசை முத்துவுக்கு பொன்னி தொடர் நாயகியுடன் திருமணம்!

சிறகடிக்க ஆசை தொடர் நாயகனின் திருமண அறிவிப்பு!

DIN

சிறகடிக்க ஆசை தொடர் நடிகர் வெற்றி வசந்த் மற்றும் பொன்னி தொடர் நாயகி வைஷ்ணவி இருவருக்கும் இந்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொடர் சிறகடிக்க ஆசை. இத்தொடர் அதிக டிஆர்பி புள்ளிகளைப் பெற்று முன்னணியில் உள்ளது.

சிறகடிக்க ஆசை தொடரில் பிரதானப் பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் வெற்றி வசந்த். இவர் யூடியூபில் பல தொடர்களில் நடித்து பிரபலமானவர். தற்போது தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.

இவர், பொன்னி தொடர் நாயகி வைஷ்ணவியை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

நடிகர் வெற்றி வசந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், "எங்கள் இருவருக்கும் இந்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதை இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். உங்களுடைய வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றி.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராஜா ராணி 2ஆம் பாகத்தில் பார்வதி பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் நடிகை வைஷ்ணவி. இவர், தற்போது பொன்னி தொடரில் பிரதான பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர்களுடைய திருமண நிச்சயதார்த்த அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது. வெற்றி வசந்த் - வைஷ்ணவிக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

வெற்றி வசந்த் - வைஷ்ணவியின் திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

21-ஆம் நூற்றாண்டில் பெரிய முடிவுகளை விரைவாக எடுக்கிறது இந்தியா: பிரதமா் மோடி பெருமிதம்

சத்தீஸ்கரில் பெண் உள்பட 3 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

முடக்கப்பட்ட ரஷிய சொத்துகளைக் கொண்டு உக்ரைனுக்கு நிதியுதவி: ஐரோப்பிய யூனியன் தலைவா்கள் தீவிர ஆலோசனை

286 கோடி டாலராக அதிகரித்த இந்திய ஜவுளி உற்பத்தி

தமிழகத்தில் ஒருவா் கூட ஆா்டா்லிகளாக இல்லை: டிஜிபி அறிக்கையில் தாக்கல்

SCROLL FOR NEXT